வளர்ச்சியில் பாரதம் முதலிடம்

ஐ.நா சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு கூட்டத்தில், ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாரதம், 2022ம் ஆண்டில் 6.7 சதவீதம் வளர்ச்சி பெறும். இதுவே, உலகின் மிக வேகமான வளர்ச்சியாக இருக்கும். சீனா 5.7 சதவீத வளர்ச்சியை பெற்று இரண்டாவது வளர்ச்சி பெரும் நாடாக இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், 2021ல் சீனாவின் வளர்ச்சி 8.3 சதவீதமாகவும் பாரதத்தின் வளர்ச்சி 27.2 சதவீதமாகவும் இருக்கும். உலகளவிலான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும். இது, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியாக இருக்கும். ஒரு சில நாடுகள், 2019ல் இருந்த வளர்ச்சியை விட கூடுதல் வளர்ச்சியை காணும். இனி கொரோனா பாதிப்புகள் அதிகம் இருக்காது என கனக்கிட்டாலும், பல நாடுகள் கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை  மீண்டும் அடைய 2030ம் ஆண்டு வரைகூட ஆகலாம். தற்போதைய நிகழ்வு, 2வது உலகப் போருக்குப் பிந்தைய நிலையை ஓரளவு நினைவுபடுத்துவதாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.