டைம் இதழ் ஒவ்வோர் ஆண்டும், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் டைம் வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டின் செல்வாக்கு மிக்க 100 தலைவர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ், சீன அதிபர் ஜிங்பிங், மேற்கு வங்க முதல்வர் மமதா, சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூனாவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில், பிரதமர் மோடி குறித்து பத்திரிகையாளர் பரீத் ஜகாரியா எழுதியுள்ள கட்டுரையில், ‘சுதந்திர பாரதத்தில், நேரு, இந்திராவுக்கு பின், மாபெரும் செல்வாக்கு பெற்ற தலைவராக நரேந்திர மோடி உள்ளார். எனினும், பாரதத்தில் மதச்சார்பின்மையிலிருந்து விலக வைத்து, ஹிந்து தேசியம் பக்கம் நெருங்க வைத்துள்ளார். பாரத முஸ்லிம்களின் உரிமைகளை பறித்துள்ளதுடன், பத்திரிகையாளர்கள் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்’ என, பொய்யாக எவ்வித ஆதாரமும் இல்லாத கருத்துகளை பதிவிட்டு தனது வன்மத்தை வெளிப்படுத்தி உள்ளார். டைம் இதழ் பிரதமர் மோடி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் குறித்து என்றுமே உண்மையை பேசியது இல்லை. அப்படி பேசினாலும் அதில் விஷம் தோய்ந்த, உண்மைக்கு மாறான கருத்துகள்தான் இடம் பெற்றிருக்கும் என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.