உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் உற்பத்திக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு சலுகைகள் அளிக்கப்படும். இதன் மூலம் 7.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கரோனா பொதுமுடக்கத்தால் முடங்கியத் தொழில்களை மீட்டெடுத்து ஊக்குவிக்கும் நடவடிக்கையாக உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு சலுகைகளை மத்திய அரசு அளித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆட்டோமொபைல், உதிரிபாக நிறுவனங்களுக்கு ரூ. 57,043 கோடி சலுகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. அதேபோல, இந்தாண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக ரூ. 25,938 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 – 2022 நிதியாண்டில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு சலுகைக்காக பட்ஜெட்டில், 13 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1.97 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டிரோன் தயாரிப்புத் தொழிலை ஊக்குவிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக 26 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.