அமெரிக்காவின் உயர்மட்ட ராணுவ அதிகாரியான ஜெனரல் மார்க் மில்லி, தற்போது ராணுவ கூட்டுத் தலைமைத் தலைவர்களின் தலைவராகவும், அமெரிக்க அதிபரின் முதன்மை ராணுவ ஆலோசகராகவும் உள்ளார். மேலும், ராணுவம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராகவும் உள்ளார். இவர், முன்னாள் அமெரிக்க அதிபரான டிரம்பின் ஆட்சி காலத்தில், சீன ராணுவ ஜெனரல் லி சூசெங்கிடம் இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவர், அமெரிக்கா சீனா மீது எவ்வித தாக்குதலையும் நடத்தாது. அப்படி நடத்த முயன்றால் அதனை தான் முன்கூட்டியே தெரிவிப்பதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். ட்ரம்ப் நிலையற்றவர் என்று மார்க் மில்லி நம்பினார். இந்த உரையாடலில் சீன ஜெனரலும் மார்க் மில்லியும் 5 வருடங்களாக ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து நட்புடன் இருந்துள்ளனர் என தெரிய வருகிறது என்று பாப் உட்வார்ட் மற்றும் ராபர்ட் கோஸ்டா இருவரும் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் தெரிவித்துள்ளனர்.