திரிபுராவில் ‘வளர்ச்சிக்கான அணிவகுப்பு’ என்ற பா.ஜ.கவின் பேரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் பிப்லாப் தேவ், ‘திரிபுராவை ஆண்ட கம்யூனிஸ்ட்டுகள் திரிபுராவின் வளர்ச்சிக்காக எதையுமே செய்யவில்லை. அதன் தலைவர் மாணிக் சர்க்கார், 20 ஆண்டுகளாக மாநில முதல்வராக இருந்தார். அவரின் மற்றொரு முகத்தை பார்த்து நான் அத்ரிச்சி அடைந்தேன். சர்காரும் அவரது கட்சியினரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு செய்யவும் தன்பூரில் வன்முறையைத் தூண்டவும் திட்டமிட்டனர். ஆனால், பா.ஜ.க ஒருபோதும் ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என பாகுபாடு பார்ப்பதில்லை. நாங்கள் அந்த தவறை ஒருபோதும் செய்வதில்லை. முந்தைய இடதுசாரி அரசின் ஆதரவில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் கொல்லப்பட்டனர். நமது அரசு 7 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளது’ என தெரிவித்தார்.