தி.மு.கவில் அதிருப்தி அலை

தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க., சார்பில், மருத்துவ அணி மாநில நிர்வாகி கனிமொழி என்.வி.என்.சோமு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ளனர். கனிமொழி என்.வி.என்.சோமு மறைந்த என்.வி.என்.சோமுவின் மகள். முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியின் பரிந்துரையில் வந்தவர் ராஜேஷ்குமார். தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் பலர் இருக்கையில் அரசியலில் அதிகம் ஈடுபடாதவர்கள், அதிகம் மக்களால் அறியப்படாதவர்களான இவர்கள் இருவரையும் தி.மு.க தலைமை அறிவித்திருப்பது தி.மு.க.,வில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதையே காட்டுகிறது. உள்ளூரிலேயே அரசியலில் அதிகம் ஈடுபடாதவர்கள் மக்களவையில் என்ன பேசுவார்கள்? இனி கட்சி பதவி, எம்.எல்.ஏ, எம்.பி சீட் எல்லாம் உதயநிதியின் பின்னால் செல்பவருக்குத்தான் கிடைக்கும் என்றால், கட்சிக்காக, உழைத்து வரும் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் என்ன பலன். இது கட்சியில் கோஷ்டி பூசலை மேலும் அதிகரிக்கவே வழி செய்யும். மேலும், வன்னியர், நாயுடு, நாடார், தேவேந்திரகுலவேளாளர், உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லை என கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்புகின்றனர்.