சி.ஐ.ஐ எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய வர்த்கம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தொழில் துறை, நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். கடன்களுக்கான வட்டி குறைப்பு, நிறுவனங்களுக்கான ஊக்கத்தொகைகளுக்காக அடுத்த பட்ஜெட் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிறுவனங்களுக்கு எப்போது எது தேவையோ, அவை உடனடியாக செய்து தரப்படும்.
தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதிகள் குறித்த நேரத்தில் சரியாக கிடைக்கவில்லை என, கடந்த முறை புகார்கள் வந்தன. ஆனால், தற்போது அப்படி எந்த கருத்தும் வரவில்லை. இது வரவேற்கத்தக்கது’ என தெரிவித்தார்.