தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.மு.க கனிமொழியின் எம்.பி நிதியை பயன்படுத்தி பேருந்து நிழற்குடை ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டு, கடந்த 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அதன் அருகே செலவான தொகை குறித்த கல்வெட்டும் அமைக்கப்பட்டது. அதில், அந்த நிழற்குடை அமைக்க ரூ.1.54 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பா.ஜ.க நிர்வாகி காயத்ரி ரகுராம், தனது அறிக்கையில், ‘இந்த நிழற்குடை அமைக்க ரூ.1.54 கோடி செலவாகுமா?’ என்று கனிமொழிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களோ, 3 பெட்ரூம் கொண்ட ஒரு பிளாட் வாங்கினாலே ஒரு கோடி தாண்டாது எனும்போது, 4 தகர ஷீட்டு, 4 ஸ்டீல் பைப்பு, 2 லைட்டு, ஒருசின்ன பிளாட்பார்ம் போட 1.54 கோடியா? ஒரு நியாயம் வேண்டாமா? என்றெல்லாம் கனிமொழியிடம் கேட்கின்றனர். பதில் அளிப்பாரா கனிமொழி?