பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், இந்த ஆண்டு, பாரதத்தில் முதல் முறையாக ‘வேத இலக்கியத்தில் ராணுவ அறிவியல் மற்றும் ராணுவ உத்திகள்’ என்ற எம்.ஏ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரதத்தின் பண்டைய நூல்களில் உள்ள அக்கால போர் முறைகள், அரசியல், நிர்வாகம், வியூக்லம் உள்ளிட்ட ஏராளமான குறிப்புகள் உள்ளன. அதனை இக்காலத்திற்கு ஏற்ப நாம் பயன்படுத்த முடியும். இத்திட்டத்தில் மாணவர்கள், வசிஷ்டரின் ‘தனுர்வேத சம்ஹிதா’ மற்றும் வைஷம்பாயனின் ‘நீதி பிரகாஷிகா’ ஆகிய இரண்டு முக்கிய புத்தகங்களைப் படிப்பார்கள். இவை இரண்டும் ராணுவ மூலோபாயத்தை போதிக்கின்றன. இந்தாண்டு, 2 ஆண்டுகள் எம்.ஏ படிப்பில் முதல் தொகுதியில் 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். நமது ராணுவமும் நமது அக்கால போர் முறைகள் குறித்து ராணுவத்தில் கற்றுத்தர முடிவெடுத்துள்ளது. சீனாவும் தனது பண்டைய போர் முறைகளை நவீனப்படுத்தி பயன்படுத்துவதாக அதன் ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.