ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கர்கள் வெளியேறும்போது ஏராளமான நவீன ராணுவ ஆயுதங்கள், வெடிபொருட்கள், விமானங்கள், பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவற்றை அப்படியே விட்டு சென்றனர். இவை தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஸ்பெக்டர் டிபென்ஸ் என்ற நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமில் அமெரிக்கர்கள் விட்டு சென்ற கவசங்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவற்றை விற்பனை செய்கிறது என பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஹம்சா அசார் சலாம் குற்றம் சாட்டினார். அதற்கான சில ஆதார புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். ஆனால், இந்த கூற்றை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. இவை தங்கள் தயாரிப்புதான் என கூறியுள்ளது. இச்செய்தியின் உண்மை பின்னணி குறித்து முழுதாகத் தெரியவில்லை என்றாலும் இது வருங்கால பேராபத்தை உணர்த்துவதாகவே உள்ளது.