தலைமையை நம்பாத வீரப்ப மொய்லி

காங்கிரஸ் கட்சியின் மூத்த அதிருப்தித் தலைவர்கள் 23 பேர், கட்சி கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்குமாறு சோனியாவுக்கு கடிதம் எழுதினர். ஜி23 என அழைக்கப்படும் அந்த 23 பேரில் வீரப்ப மொய்லியும் ஒருவர். அதன் பின் அங்கிருந்து விலகிய அவர் சோனியாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பல மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். அவர் கட்சிக்கு வெளியில் இருந்து சீர்திருத்தங்களை செய்வதற்கு பதிலாக, கட்சிக்குள் இருந்து செயல்பட வேண்டும். காங்கிரசுக்கு தலைமை தாங்க ராகுல்காந்தி பொருத்தமானவர். இருப்பினும், கட்சியை சீரமைப்பதுதான் இப்போது முக்கியம். பிரசாத் கிஷோரால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியை தரமுடியும் என கூறியிருந்தார். அவரின் இக்கருத்து அவர் ராகுலையும் சோனியாவையும் உள்ளூர நம்பவில்லை என்பதையே மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது என இணையதளவாசிகள் கூறுகின்றனர்.