ஜல் சக்திக்கான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஜல் ஜீவன் மிஷனின் கீழ், 2024க்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு இருப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போதுவரை ஐந்து கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது விரைவில் 8 கோடியை தாண்டும். தற்போது, 1,10,000 கிராமங்களில் 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புள் வழங்கப்பட்டுள்ளன. தெலுங்கானா, குஜராத், பஞ்சாப், உத்தரகண்ட், மகாராஷ்டிரா, ஹிமாச்சலப் பிரதேசம் ஆகியவை ஜல் ஜீவன் மிஷனின் கீழ் 80 முதல் 100 சதவிகிதம் வரை இலக்குகளை அடைந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, சில மாநிலங்கள் பின்தங்கியுள்ளன’ என்று கூறினார்.