கொரோனா பரவல் தொடர்பாக கடந்த பிப்ரவரி 2020ல் லான்செட் என்ற பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியானது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘பீட்டர் டஸ்ஸாக்’ என்ற அமைப்பை சேர்ந்த 27 விஞ்ஞானிகள் இக்கட்டுரையை எழுதி இருந்தனர். அக்கட்டுரையில், கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து பரவவில்லை என கூறப்பட்டிருந்தது. அப்போது இக்கட்டுரை சில அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், எப்படி இந்த முடிவுக்கு வந்தார்கள் என்பதை அக்கட்டுரைடையில் அந்த விஞ்ஞானிகள் விளக்கவில்லை. இந்நிலையில் தற்போது பீட்டர் டஸ்ஸாக் அமைப்பு, 2014 முதல் 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் வௌவால் கொரோனா வைரஸ்கள் குறித்து ஆராய, தேசிய சுகாதார நிறுவனத்தில் இருந்து வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜிக்கு 3.4 மில்லியன் டாலர்களை வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. இக்கட்டுரையை எழுதிய 27 பேரில் 26 பேர் ஊஹான் ஆய்வகத்துடன் சம்பந்தப்பட்டவர்கள். அதனை மறைப்பதற்காகவே இப்படி ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டனர் என்பது வெளியாகியுள்ளது என ‘தி டெலிகிராப்’ பத்திரிகை ஒரு புலனாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.