கோயில் நிலங்களை பூசாரியோ, அர்ச்சகரோ விற்பதை தடுக்க மத்திய பிரதேச அரசு நில வருவாய் சட்டத்தின் கீழ், கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் உரிமையாளர்களாக அர்ச்சகர், பூசாரிகளின் பெயர்களை நீக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவை ரத்து செய்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய பிரதேச அரசு மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘கோயில் நிலத்தின் உரிமையாளர், அந்த கோயிலில் உள்ள கடவுள் தான். அர்ச்சகரோ, பூசாரியோ அல்ல. அதனால் கோயில் நில பத்திரத்தில் உரிமையாளர் என்ற இடத்தில் அக்கோயிலில் உள்ள தெய்வத்தின் பெயர்தான் இடம் பெற வேண்டும்’ என உத்தரவிட்டனர்.