சான்பிரான்சிஸ்கோ விசித்திர திட்டம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அதனை தடுக்கும் விதமாக சான்பிரான்ஸிஸ்கோ நகர நிர்வாகம் ஒரு விசித்திரமான திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஈடுபடும் அல்லது ஈடுபட வாய்ப்புள்ள பழைய குற்றவாளிகளுக்கு, அவர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபடாமல் இருக்க மாதம்தோறும் 300 டாலர்கள் உதவித்தொகை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதை அங்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவரின் தாய் ஒருவர், “நீங்கள் அவர்களின் துப்பாக்கிகளை எடுக்கவில்லை. அவர்கள் அதிக துப்பாக்கிகளை வாங்குவதற்கு பணம் கொடுக்கிறீர்கள்” என கூறினார். ‘இது பயங்கரமான யோசனை’,  ‘இனி அவர்களுக்கு மாதம்தோறும் கிறிஸ்துமஸ்தான்’ என பல்வேறு கண்டனங்களும் எழுந்துள்ளன.