இலங்கை கடற்படையினர் மாலே கடற்பகுதியில் ரோந்தின்போது, பாகிஸ்தானை சேர்ந்த ஒரு படகில் இருந்து 336 கிலோ ஹெராயின் வகை போதைப்பொருட்களை கைப்பற்றினர். அப்படகில் இருந்த ஏழு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 3.1 பில்லியன். விசாரணையில் இந்த போதைப்பொருட்கள் கொழும்புவுக்க கடத்தப்படவிருந்தது தெரியவந்தது. இதேபோல, கடந்த ஆண்டு டிசம்பரில், பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து கிளம்பி வந்த ஒரு கப்பலில் இருந்து 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகளை இலங்கை அதிகாரிகள் கைப்பற்றினர். 4 பகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் இந்த துறைமுகத்தை சீனா கட்டுப்படுத்தி வருகிறது. போதைப்பொருள், ஆயுதங்களை கடத்துவதற்காக கப்பல்கள் சர்வதேச சட்டங்களை மீறி சர்வதேச கடற்பரப்பில் நிலைநிறுத்தப்படுவதாக இலங்கையில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல லட்சத்தீவு பகுதிகளிலும் நடப்பதாக நமது உளவுத்துறையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.