ஏற்றுமதியை அதிகரிக்கும் உ.பி

மனித நாகரீக வளர்ச்சிக்கு நீர்நிலைகள் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு ஏற்றுமதி வளர்ச்சிக்கு கடற்கரைகள் அவசியம். ஆனால், நமது பாரதத்தில் கடற்பகுதிகள் இல்லாத மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேச மாநிலம், கடந்த 2021 ஏப்ரல், மே மாதங்களில் சரக்கு ஏற்றுமதியை ரூ. 21,500 கோடிக்கு செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 150 சதவிகிதத்திற்கும் அதிகம். இம்மாநிலத்தின் முக்கிய ஏற்றுமதி பொருட்களாக தோல், ஜவுளி, கண்ணாடி பொருட்கள் உள்ளன. உத்தரபிரதேசத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வரும் வரவேற்பால், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில அரசு 75 மாவட்டங்களிலும் வெளிநாட்டு வர்த்தக ஊக்குவிப்பு, வசதி மையங்களை அமைக்கவும், பல்வேறு எம்.எஸ்.எம்.இ துறைகளிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது. தரவுகளின்படி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவுக்குப் பிறகு நாட்டின் ஆறாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது.