ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிஷப் கட்டேரா சுரேஷ்குமார், கிறிஸ்தவ பாதிரியாக இருந்தாலும் எஸ்.சி இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதற்காக ஹிந்து எஸ்.சி சான்றிதழ் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இவர் நடத்தும் ஹார்வெஸ்ட் இந்தியா என்ற பெரிய சுவிசேஷ அமைப்பு, ஒரு பெரிய தேவாலயம், 10 பைபிள் கல்லூரிகளை நடத்துகிறது. இந்த குற்றக்ச்சாட்டை விசாரித்த குண்டூர் மாவட்ட ஆட்சியரும் கட்டேரா சுரேஷ்குமார் ஒரு ஹிந்துதான் என அறிவித்தார். இதனையடுத்து சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இது குறித்து புகார் அளித்தது. எஸ்.சி எஸ் டி உரிமை மன்றமும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி தேசிய எஸ்சி கமிஷனில் புகார் அளித்துள்ளது. இவ்விவகாரத்தை தற்போது தேசிய எஸ்சி கமிஷன் விசாரித்து வருகிறது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. ஏற்கனவே, வெளிநாட்டு நிதி முறைகேட்டு புகாரினால் ஹார்வெஸ்ட் இந்தியாவின் எப்.சி.ஆர்.ஏ லைசன்ஸ் முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பியோலா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மிஷனரி மாநாட்டில் கட்டேரா சுரேஷ்குமார், பாரதம் குறித்து கூறிய பல பொய்யான தகவல்கள், தேச விரோத, ஹிந்து விரோத கருத்துகளை பேசியுள்ளார். பாரதப் பிரதமரை தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.