வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சி

சாலை போக்குவரத்து அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடனான சந்திப்பில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘உலகளாவிய ரீதியில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாகி வருகின்றன. அவை முன்னெப்போதையும் விட வேகமாக, பாதுகாப்பாக நிலையானதாக உருவாக்கப்பட்டு வருகின்றன என்றார். மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த சாலைகளை அமைத்தல், புதிய தொழில்நுட்பத்தில் சாலை வடிவமைப்பு, கட்டுமானங்கள் மேற்கொள்வதன் அவசியத்தையும் குறித்து வலியுறுத்தினார். ‘அம்பாலா கோட்புட்லி ஆறு வழிச்சாலை கிரீன்ஃபீல்ட் சாலைப் பணிகள் சாதனை வேகத்தில் கட்டப்பட்டு வருகிறது. 11,000 கோடி முதலீட்டில், 313 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலை பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் சாலை உள்கட்டமைப்பை மாற்றும்’ என கூறினார்.