உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிந்துக்களின் புனிதத் தலமான வாரணாசியில் சுற்றுலா வசதிகளில் புதிய பரிமாணங்களைக் கொண்டு வரும் நோக்கில் அம்மாநில அரசு, வாரணாசியில் இருந்து கிளம்பி மிர்சாபூர் சுனார் கோட்டைக்கு கங்கை ஆற்றில் கப்பலில் சென்று திரும்பும் விதத்தில் புதிய ரோ-ரோ கப்பல் சேவையை துவங்கியுள்ளது. இதற்காக இரண்டு ரோ ரோ கப்பல்கள் பி.பி.இ திட்டத்தின் கீழ் குத்தகையாக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இதில் வாரணாசியின் ரவிதாஸ் காட் முதல் சுனார் வரை பல்வேறு பாரத கலாச்சாரத் தளங்களைக் காணலாம். நேரடி இசை நிகழ்ச்சிகள், காலை, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, சுனார் கோட்டை, சுல்தான்கேஸ்வர் மகாதேவ் டிக்கெட்டுகள், வழிகாட்டி என அனைத்தும் இணைந்து ஒரு நபருக்கு ரூ. 3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுகள், குழந்தைகளுக்கு இலவசம், மொத்தமாக டிக்கெட் வாங்குபவர்களுக்கு சலுகைகள் என பல்வேறு கவர்ச்சித் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.