மிளிரும் பாரதத்தின் யுனிகார்ன்

7,300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் என அழைக்கப்படும். பாரதத்தில் நடப்பு ஆண்டில், ‘மாதத்துக்கு மூன்று’ என்ற அளவில், யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, பாரதத்தில் மொத்தம் 51 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. இதில், நடப்பு ஆண்டில் மட்டுமே 26 நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அதாவது, சராசரியாக மாதத்துக்கு மூன்று நிறுவனங்கள் என உருவாகி உள்ளன. இதனை நமது மத்திய அரசு ஆரம்பித்தபோது, ‘பகோடா ஸ்கீம்’ என எதிர்கட்சிகள் கொண்டல் அடித்தன. ஆனால், தற்போது உலகளவில் அதிக யுனிகார்ன் கொண்ட நாடுகள் வரிசையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக நமது பாரதம் உள்ளது.