கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை என கூறி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில் நடை மூடப்படும், விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்கத் தடை, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கோயில்கள் இடிப்பு என்று தி.மு.க தலைமையிலான தமிழக அரசு விதித்து ஹிந்துக்களை மட்டும் தொடர்ந்து வஞ்சிக்கிறது. ஆனால், கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம்களின் மசூதிகளை கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில், கோவை மாவட்டத்தில் அமாவாசை நாளான செப்டம்பர் 6ம் தேதி கோயில்களில் அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார். கோயில்களை வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தமிழக அரசும் ஹிந்து அறநிலையத்துறையும் கோயில்களில் உரிய முன்னெச்சரிகையுடனும் கட்டுப்பாடுகளுடனும் பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்யாமல் இப்படி ஒரேயடியாக தடை போடுவது, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போன்றது என கோவை மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.