டிரோன் எதிர்ப்பு அமைப்பு

பாரத கடற்படை, டி.ஆர்.டி.ஓ தயாரிப்பு கடற்சார் டிரோன் எதிர்ப்பு அமைப்பை மத்திய அரசின் பெல் நிறுவனம் உற்பத்தி செய்துத்தர ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், டிரோன்களால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இந்த அமைப்பு தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு படைகளுக்காக அவசரத் தேவையை முன்னிட்டு ஜென் டெக்னாலஜி நிறுவனத்திடம் இருந்து சுமார் 120 கோடிகள் செலவில் டிரோன் எதிர்ப்பு அமைப்புகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்குள்ளாக தயாரித்து வழங்கும் வகையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. எனவும் ஒப்பந்தத்தின் இரகசியம் கருதி ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என ஜென் டெக்னாலஜி நிறுவனம் கூறியுள்ளது. காஷ்மீரில் விமான தளத்தில் ஆளில்லா டிரோன் மூலம் தாக்குதல் நடந்த பிறகு முப்படைகளும் தற்போது இதனால் ஏற்படும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து டிரோன் எதிர்ப்பு அமைப்புகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன.