இதற்கு தடை இல்லையா?

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 14 ஆண்டுகளுக்கு மேல் உள்ள முஸ்லிம்களையும், 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி இரு தினங்களுக்கு முன் இந்திய தேசிய லீக் கட்சி பாளையங்கோட்டையில் சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நட்த்தியது. இதில் அக்கட்சியின் தலைவர்களுடன் வேறு சில அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் அரசு விதித்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறியும், சமூக இடைவெளி இன்றியும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் விடுதலை செய்யக் கோரியது, குண்டு வெடிப்பு நிகழ்த்தி அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்த முஸ்லிம் பயங்கரவாதிகளையும், மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்களையும்தான். இப்படி பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே தேசத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளன இந்த அமைப்புகள். அதற்கு அனுமதி அளித்ததுடன் பாதுகாப்பும் கொடுத்துள்ளது விடியல் அரசு. ஆனால், ஹிந்துக்களை வஞ்சிப்பதிலும், ஹிந்துக்களின் திருவிழாக்களை தடுப்பதிலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.