பசுக்களை பாரதத்தின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதன் பாதுகாப்பு ஹிந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பசுக்களை மதத்தோடு பொருத்தி பார்க்காமல், பசுவை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகன் கடமை. மாட்டிறைச்சி உண்பது அடிப்படை உரிமை அல்ல. பசுவை வழிபடுபவர்கள் அதனை பொருளாதார ரீதியாக நம்பியிருப்பவர்களுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு என தெரிவித்தது. பஞ்சாப்பின் கோ சேவா கமிஷன், முஸ்லிம்களின் பழம்பெரும் மதரசாவான பிராங்கி மெஹல் மதரஸா உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளன.