லடாக்கில் போர் பயிற்சி

பாரத ராணுவம் லடாக் பகுதியில் மாபெரும் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. நமது ராணுவத்தின் XIV கோர் அல்லது பயர் அன்ட் பியூரி கார்ப்ஸ் படைப்பிரிவினர் இந்த ஒருங்கிணைந்த போர் பயற்சியை லடாக்கில் மேற்கொண்டுள்ளனர். இந்த பயிற்சியை பயர் அன்ட் பியூரி கோர் படைப் பிரிவின் கமாண்டர் பிஜிகே மேனன் நேரில் பார்வையிட்டார். நேரடி தாக்குதல் முறையில் உண்மையான குண்டுகளை வீசி இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது. எல்லையில் பாகிஸ்தான், சீனா என இறுபுறமும் பிரச்சனைகள் தொடரும் சூழலில் நடைபெறும் இந்த பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், சீனாவுடன் எல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகிப்பவர் பி.ஜி.கே மேனன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.