100 நாளில் 3,338 மனுக்கள்

ஹிந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் சமீபத்தில்  ‘கோரிக்கைகள் பதிவிடுக’ எனும் இணைய திட்டமும் பக்தர்கள் குறைகேட்பு சிறப்பு மையமும் துவக்கப்பட்டது. இவற்றில் பெறப்படும் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதில், கடந்த 100 நாட்களில் 3,338 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 95 மனுக்கள் மீது நடவடிக்கைகள் முழுமை அடைந்துள்ளது. 1,615 மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 78 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவற்றில், திருப்பணிகள், ஆக்கிரமிப்புகள் குறித்த புகார்கள்தான் அதிகம் வந்து உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.