லடாக் எல்லைப்பகுதியில், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பாங்கோங் ஏரியை ஒட்டி 18,600 அடி உயரத்தில் புதிய சாலை போடப்பட்டுள்ளது. கேலா பாஸை கடந்து லோல்காக்ரி கியாம்ட்சோ ஏரி, தருக் கிராமம், லே பகுதியை இணைக்கும். இந்த புதிய சாலையை பா.ஜ.கவின் லடாக் தொகுதி எம்.பி ஜம்யாங் ட்ஸெரிங் நாம்யால் திறந்துவைத்தார். இந்த சாலை பாரத ராணுவத்தின் 58 பொறியாளர் படைப்பிரிவினரால் இரண்டே மாதங்களில் உருவாக்கப்பட்டது. ஜிங்க்ரால் முதல் டாங்ட்சே வரையிலான 41 கி.மீ பயண தூரத்தை இது குறைக்கும். இச்சாலை, ராணுவ பயன்பாட்டிற்கு மட்டுமல்ல, இது அந்த பிராந்திய மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும். பனி சறுக்கு உள்ளிட்டவற்றிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அப்பகுதிகளில் வாழும் நாடோடி கால்நடை பராமரிப்பாளர்களின் வாழ்க்கை தரம் இதனால் உயரும் என ராணுவம் தெரிவித்துள்ளது.