சி.பி.ஐ வழக்குப் பதிவு

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறை, கொலைகள், கற்பழிப்பு, சூறையாடல் உள்ளிட்ட குற்றங்கள் சம்பந்தமாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.ஹெச்.ஆர்.சி) குழு அறிக்கையை சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் இதுவரை 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.