பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்

டைம்ஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பாரதத்தை சேர்ந்த 71 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இப்பட்டியலில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISc) பெங்களூரு பாரதத்தில் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தரவரிசையில் 301 முதல் 350க்குள்ளான தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 35 பாரதப் பல்கலைக் கழகங்கள், இப்பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களை பெற்றுள்ளன. ஐ.ஐ.டி ரோபார் பாரத அளவில் இரண்டாமிடத்தில் தொடர்கிறது, ஜே.எஸஎஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி இப்பட்டியலில் புதிதாக அறிமுகமாகி உள்ளது. ஐ.ஐ.டி இந்தூர் நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லி, பம்பாய், கரக்பூர், மெட்ராஸ் உள்ளிட்ட ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், இத்தரவரிசையில் முரண்பாடு, வெளிப்படைத்தன்மை இன்மை காரணமாக பங்கேற்காது என்ற அறிவிப்பால் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.