மதவெறி போதகர் கைது

கோவையில், விநாயகர் சதர்த்தி ஊர்வலங்கள், விக்கிரக வழிபாடு உள்ளிட்டவை நடைபெறக்கூடாது என கடந்த 3 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி காலகட்டத்தில் கிறிஸ்தவ ஜெப யாத்திரை நடைபெற்று வருகிறது. இதனை இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என கோவையில் உள்ள கிறிஸ்துவர்களுக்கு கோவை, செயின்ட் பால் கல்லுாரி சார்பில், அதன் தலைவர் டேவிட் கடிதம் அனுப்பி உள்ளார். அக்கடிதம் பிட் நோட்டீஸ்களாகவும் விநியோகிக்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பது, மத மோதலுக்கு வழிவகுப்பது, ஒரு மதத்திற்கு எதிராக செயல்படுவது, ஹிந்துக்களின் மனங்களை புண்படுத்துவது என செயல்பட்ட மதபோதகர் டேவிட் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்தது. அவரை கைது செய்யாவிட்டால்  5 ஆயிரம் பேர் திரண்டு சாலை மறியலில் ஈடுபடுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஷம பிரசாரம் செய்த குற்றத்தின் கீழ் கிறிஸ்தவ மதபோதகர் டேவிட் நேற்று கைது செய்யப்பட்டார். ஏற்கனவே, கொரோனாவை காரணம் காட்டி இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்து தமிழக அரசு ஹிந்துக்களை வஞ்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.