அதிகரித்த ஜி.டி.பி

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மீட்புப் பாதையில் செல்கிறது என்பதற்கான அடையாளமாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பாரதத்தின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை போல. 20.1 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த காலாண்டில் மோசமான கொரோனா தாக்க சூழலுக்கு மத்தியில் மத்திய அரசின் சீரிய முயற்சியால் ஏற்பட்ட நல்ல வளர்ச்சியை குறிக்கிறது. இது ஒரே காலாண்டில் மிக உயர்ந்த ஜி.டி.பி வளர்ச்சியாகும். கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் பொருளாதாரம், அவ்வளவாக பாதிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது என தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார். முன்னதாக அவர் பொருளாதாரம் ‘வி ‘வடிவ வளர்ச்சியினை காணலாம் என கூறியிருந்தார். தற்போது அதே போல மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.