பஞ்சஷீரில் இணையம் முடக்கம்

ஆப்கன் தலைநகர் காபூல் தலிபான்களிடம் வீழ்ந்த பிறகு அதன் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பிச் சென்றார். இதனையடுத்து, ஆப்கனின் அரசியலமைப்பின்படி துணை அதிபர் அம்ருல்லா சலேதான் தற்போதைய தற்காலிக அதிபர். அவர் உயிருக்கு பயந்து தலிபான்களுக்கு எதிராக ஆப்கனில் இயங்கி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் அமைப்பின் தலைமையிடமான பஞ்சஷீர் பகுதியில் தங்கியுள்ளார். அங்கிருந்து அவர் வெளியிடும் செய்திகளை முடக்கவும், அப்பகுதியை உலகத்தின் பார்வையில் இருந்து மறைத்து அதனையும் முழுவதுமாக கைப்பற்றவும் தலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் முதல்கட்டமாக அங்கு இணைய வசதியை முற்றிலுமாக முடக்கியுள்ளனர் தலிபான்கள். துணை அதிபர் அம்ருல்லா சலே, பல காலமாக ஐ.எஸ்.ஐ.எஸ், ஹக்கானி அமைப்புகளுடனான தலிபான்களின் தொடர்பு, அவர்களுக்கு பாகிஸ்தானின் உதவி போன்றவற்றை எதிர்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.