விவசாயிகளை வஞ்சிக்கும் தி.மு.க

விவசாயிகளுக்கு நன்மை செய்யும் புதிய விவசாய சட்டங்களை எதிர்ப்பதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் வளமான வாழ்வுக்கு குறுக்கே நிற்பது வேதனை அளிக்கிறது என, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், ‘விவசாயிககுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கொடுத்தபோது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு எப்படி நேரடியாக உதவலாம்? என கேட்காத தி.மு.க, தற்போது வேளாண் சட்டங்களை மட்டும் எதிர்க்கிறது. விவசாயிகள் சுதந்திரமாக, தங்கள் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்க வழிவகை செய்யும் சட்டத்தை தடுக்கிறது. விவசாயிகளை ஏமாற்றி, அதிக லாபம் பெறும் இடைத்தரகர்களை காப்பாற்றவே தி.மு.க அரசு செயல்படுகிறது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், இடைத்தரகர்கள் தான் போராடுகின்றனர். விவசாயிகள் விடுதலை கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர். இது தெரிந்தும், எதிர்க்கட்சி என்பதால் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன. கடந்த 2016ல் தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்ன ‘வேளாண் பொருள் விற்பனைக்கு புதிய கொள்கை, இடைத்தரர்கள் நீக்க நடவடிக்கை, தமிழக விளைபொருளை சர்வதேச சந்தையில் விற்க ஒரு அமைப்பு, குறைந்தபட்ச விலைக்கு பதிலாக அதிகபட்ச விலை கிடைக்க நடவடிக்கை போன்ற விஷயங்கள்தான் புதிய வேளாண் சட்டங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க மகிழ்ச்சி அடையாமல் பதற்றமடைவது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.