உலகில் பல வல்லரசு நாடுகளே தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் திண்டாடி வருகின்றன. பாரத்த்துடன் ஒப்பிடுகையில் அங்கு மக்கள் தொகையும் மிகக் குறைவுதான். ஆனால், பாரதம் உலகிலேயே மிக அதிகமாக 61 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளது. அதாவது நமது நாட்டு மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதைத்தவிர ஐ.நா பாதுகாப்புப் படையினர், அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம், உள்ளிட்ட நாடுகளுக்கும் பாரதம் இலவச தடுப்பூசிகள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதியுதவி, ஒத்துழைப்பு, சீரிய திட்டமிடல், தெளிவான அணுகுமுறை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான நட்பு என மத்திய அரசு எடுத்த மாபெரும் பல்நோக்கு முயற்சிகள்தான் காரணம் என்றால் அது மிகை அல்ல.