நீரஜ் சோப்ரா ஸ்டேடியம்

மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு பயிற்சி மையமான ஏ.எஸ்.ஐ, டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கௌரவிக்கும் வகையில் தனது விளையாட்டு மைதானத்திற்கு அவரது பெயரை சூட்டியுள்ளது. இந்த அரங்கத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இதில் நீரஜ் சோப்ரா, ராணுவ தளபதி எம்.எம் நரவானே உல்ளிட்டோர் பங்கேற்றனர். நீரஜ் சோப்ரா ராணுவத்தில் சுபேதாராகப் பணிபுரிகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எஸ்.ஐ இதுவரை 34 ஒலிம்பிக் வீரர்கள், 22 காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கம் வென்றவர்கள், 21 ஆசிய விளையாட்டுப் பதக்கம் ஈட்டியவர்கள், ஆறு இளைஞர் விளையாட்டுப் பதக்கம் வென்றவர்கள், 13 அர்ஜுனா விருது பெற்றவர்களை உருவாக்கியுள்ளது என்ற பெருமை கொண்டது.

இந்நகழ்வில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அமைச்சர், நவீன அறிவியல் முறையில் திறமையாளர்களை அடையாளம் காண்பது, முறையான உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, விளையாட்டு அறிவியல் ஆதரவு, சர்வதேச வெளிப்பாடு, ஒருங்கிணைந்த சிறப்பான உட்கட்டமைப்புகளுடன் சர்வதேச போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களை தயார்படுத்தும் ஒரு முதன்மை விளையாட்டு பயிற்சி நிறுவனமாக ஏ.எஸ்.ஐ உருவாகியுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார்.