தேச விடுதலையின் 75வது ஆண்டை கொண்டாடும் அம்ருத் மகோற்சவத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொது சேவை மையங்களின் வாயிலாக மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில், நாடு முழுதும் கிராம அளவில் 2,000 முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், அரசின் திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கான இணையதளங்கள், அவற்றில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்தும் முகாமில் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளிடம் பேசிய, மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, ”ஊரக தொழில் முனையங்களை உருவாக்கவும் வேலையில்லாத இளைஞர்களுக்கும், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கும் தகுந்த வாய்ப்புகளை வழங்கவும் தற்சார்பு பாரதத்திற்கு வழிவகுக்கும் பணிகளில் தேசிய கால்நடை இயக்கம் செயல்படும்” என கூறினார். இதில் பேங்கேற்று பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ”விடுதலையின் அம்ரித் மகோற்சவம் பாரத மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேசிய கோகுல் இயக்கம், விவசாய பொருட்களின் அதிக உற்பத்திக்கு உதவுவதோடு விவசாயிகளின் வருவாயையும் உயர்த்தும்,” என்றார்.