பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று உள்நாட்டு ரோந்து கப்பலான விக்ரஹாவை நாட்டு பணிக்காக அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளில் கடற்படைத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, முன்னேற்றங்களை பாராட்டினார். மேலும், ‘பாதுகாப்பு அமைச்சகம், கடலோர காவல்படை, எல்&டி இடையே ‘விக்ரமில்’ தொடங்கிய பயணம் இன்று விஜய், வீர், வராஹா, வரத், வஜ்ரா என பயணித்து தற்போது ‘விக்ரஹா’ வை அடைந்துள்ளது. இது போன்ற பாதுகாப்புக் கப்பல்கள் நம்மைப் போன்ற ஒரு நாட்டிற்கு அவசியம் தேவை. பாரதம், இந்தியப் பெருங்கடலுடன் நேரடியாக தொடர்புடைய ஒரு நாடு. கடலோர காவல்படை எப்பொழுதும் நமது அண்டை நாடுகளுக்கு உதவி செய்யத் தயாராக உள்ளது. கடந்த ஆண்டு ‘நியூ டயமண்ட்’ என்ற டேங்கர், இந்த ஆண்டு ‘எக்ஸ்பிரஸ் பெர்ல்’ என்ற சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தின் போது இலங்கைக்கு வேகமான உதவி வழங்கியுள்ளது’ என பேசினார்.