யாஹூ செய்திகள் இணையத்தின் செயல்பாட்டை, யாஹூ நிறுவனத்தின் உரிமையாளரான வெரிசோன் மீடியா பாரதத்தில் நிறுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல், யாஹூ கிரிக்கெட், யாஹூ பைனான்ஸ், பொழுதுபோக்கு உள்ளிட்ட இணைய சேவைகளும் நிறுத்தப்படுள்ளன. பாரதத்தில் அன்னிய நேரடி முதலீட்டு விதியின் கீழ், ‘டிஜிட்டல்’ ஊடக நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை 26 சதவீதமாக குறைத்தது, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஊடக வணிகத்தை மறுசீரமைப்பதில் உள்ள பிரச்சனைகள், பொருளாதார சவால்கள் காரணமாக யாகூ நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் யாஹூ மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதன் சேவைகள் வழக்கம் போலவே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.