அசாமில் நவீன படகு கட்டும் தளம்

அசாமின் ஆறுகளில் 200க்கும் மேற்பட்ட சிறிய பெரிய படகுகள் பயணிக்கின்றன. இவை சரக்குப் போக்குவரத்து, மீன்பிடித்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றன. அவை செல்லும் நீர்வழிப்பாதைகள் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் செம்மைப்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம், இப்படகுகளை பழுதுபார்க்க ஒவ்வொரு முறையும் கொல்கத்தாவுக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, அசாமின் ​​கவுஹாத்தியில் உள்ள பாண்டுவில் இவ்வசதியை ஏற்படுத்த அசாம் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் மற்றும் ஹூக்லி கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான தொழில்நுட்ப ஆதரவை சென்னை ஐ.ஐ.டி வழங்க முன்வந்துள்ளது. இதற்காக அசாம் அரசு ஒதுக்கியுள்ள நிலத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த படகு கட்டும், பழுது நீக்கும் மையம் ஆகஸ்ட் 2023 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.