ராகுலின் புலம்பல்

‘தேசிய சொத்துக்களை பணமாக்குதல்’ என்ற இந்த திட்டத்தில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டு, அத்தொகை மீண்டும் அடிப்படை கட்டமைப்பு துறையில் முதலீடு செய்யப்படும். இத்திட்டத்தில், ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கி, குறித்த காலத்திற்குப் பின், மீண்டும் பெறும் வகையில் புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. ஆனால், இத்திட்டம் குறித்த விவரம் புரியாமல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் பொதுத்துறை நிறுவன சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டன. மும்பை – புனே விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில் 8,000 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. அப்போது ஏன் ராகுல் எதிர்க்கவில்லை, அது என்ன அவர்களின் குடும்ப சொத்தா? ஒரே ஒரு காமன்வெல்த் விளையாட்டு மூலம் எவ்வளவு பணம் சுருட்டப்பட்டு பல பினாமி கணக்குகளில் போடப்பட்டது? இத்திட்டம் பற்றி எதுவுமே தெரியாமல் ராகுல் பேசுகிறார். மமதாவும் எதிர்க்கிறார். என அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

ஆனால், அதன் பிறகும் அத்திட்டத்தை குறித்து சரியாக புரிந்துகொண்டு பிறகு அறிவுபூர்வமாக அதனை எதிர்கொள்ளமுடியாத ராகுல், கொரோனா தடுப்பில் அரசின் கவனம் இல்லை, சொத்துகளை விற்பதில்தான் அரசு தீவிரம் காட்டுகிறது என புலம்பி வருகிறார்.