குழந்தைகள், இணையத்தை பாதுகாப்பான முறையில் கையாள்வதற்கு ஏதுவாக ஒரு புதிய வசதியை, தமிழ் உட்பட, எட்டு மொழிகளில் வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், பாரதத்தில் இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி ஆகிய எட்டு மொழிகளில் இந்த பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இத்திட்டம் குழந்தைகள் இவற்றை விளையாட்டுடன் இணைந்து கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அமர் சித்திர கதா என்ற பிரபல, ‘காமிக்ஸ்’ இதழுடன் இணைந்து இதனை செயல்டுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமர் சித்திர கதா இதழ்களிலும் இன்டர்நெட் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் இடம்பெறும்.