மேகாலயாவில் தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் என்னும் அமைப்பின் தலைவர் ஜூலியஸ் டார்பாங். இவர் மீது கடந்த 2007ம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜூலியஸ் டார்பாங்கை கைது செய்தனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில், டார்பாங்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டு கால சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. முன்னதாக, இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே சட்டசபை தேர்தலில் ஜூலியஸ் டார்பாங் பட்ஸ் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.