முடக்கப்படும் இருசக்கர வாகன திட்டம்

சட்டசபையில் பேசிய அ.தி.மு.கவின் வேலுமணி, 3.09 லட்சம் மகளிர் பயன்பெற மானிய விலையில், இரு சக்கர வாகனம்; மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க, ‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ 2018ல் துவக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து, கொள்கை விளக்க குறிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெரியகருப்பன், பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இருசக்கர வாகன திட்டத்திற்கு வரவேற்பு இல்லை என தெரிவித்தார். இதுகுறித்து, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சட்டசபைக்கு வெளியே அளித்த பேட்டியில், பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.