பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தல்

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை வரவேற்ற பாரதிய கிசான் சங்கம், இதில் சில மாற்றங்களை பரிந்துரைத்தது. அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனையொட்டி கருத்துத் தெரிவித்த பாரதிய கிசான் சங்க பொருளாளர் யுகல் கிஷோர் மிஸ்ரா, ‘குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளின் செலவின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். புதிய விவசாயச் சட்டங்களால் எழும் சர்ச்சைகளைத் தீர்க்க, விவசாயிகளின் கருத்துக்களை ஆராய்ந்து புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 8 அன்று நாடு தழுவிய அடையாள போராட்டம் நடத்தப்படும். அதன் பிறகும் எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்காவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். மோடி தலைமையிலான மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் நடத்தவில்லை. அப்படியிருந்தால் எங்கள் அமைப்பு போராட்டத்தை நாட வேண்டிய தேவையில்லை. விவசாயிகளின் நலன் சார்ந்த பிரச்சினைகளில் மாநில அரசுகள் உட்பட யாரும் தீவிரமாக இல்லை’ என கூறியுள்ளார்.