மெஹபூபா பேச்சிற்கு எதிர்ப்பு

காஷ்மீரில் கட்சிக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி  ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டை கைப்பற்றியதை ஜம்மு காஷ்மிருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். மேலும், வன்முறையைத் தூண்டும் விதமாக, மக்களின் விருப்பத்தைக் கேட்டு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும். இல்லையெனில், மத்திய அரசு மண்டியிடும் நிலை விரைவில் உருவாகும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க தலைவர் ரவிந்தர் ரெய்னா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.