கலெக்டர் அலுவலகம் கட்டத் தடை

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் உள்ள நாகரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம் அமைப்பதற்காக தமிழக அரசு பல மாடி கட்டடம் கட்ட ஆரம்பித்தது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தார். முன்னதாக ஏப்ரல் மாதத்தில் ஆரம்பகட்ட  வேலைகளை மட்டுமே தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சட்டரீதியான அனுமதிகள் எதையும் பெறாமல் கொரோனா பொதுமுடக்க காலத்தில் அரசாங்கம் கட்டுமானத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.