ராணுவ துறையில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான திட்டத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர், ‘உலக நாடுகளின் அரசியல் சூழல் தொடர்ந்து மாறி வருகிறது. இது, நம் நாட்டின் பாதுகாப்பு சவால்களை மேலும் சிக்கலானதாக மாற்றி வருகிறது. நம் ராணுவத்தின் ஆயுத தேவைகளுக்காக வெளிநாடுகளை எப்போதும் முழுமையாக சார்ந்திருக்க முடியாது. நம் ராணுவத்தை வலுவானதாக மாற்றினால் மட்டும் போதாது. அதற்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் உற்பத்தி செய்வதில் நாம் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும். நவீன ஆயுதங்கள் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது’ என அழைப்பு விடுத்துள்ளார்.