நாட்டின் வளர்ச்சி, அன்னிய செலவானி உயர்வு போன்றவற்றில் இன்றிமையாத பங்கு வகிப்பது ஏற்றுமதித்துறை. ஏற்றுமதி வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வறு ஊக்குவிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றுபவை சிறிய, நடுத்தர ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள். இதனை ஊக்குவிக்கும்பொருட்டு தற்போது ‘உபார்தே சிதாரே’ என்ற மாற்று முதலீட்டு நிதி (ஏ.ஐ.எஃப்) திட்டத்தை ரூ. 250 கோடி நிதி முதலீட்டுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று துவங்கி வைக்கிறார். இந்த திட்டம், வருங்காலத்தில் பெரிதாக வளர வாய்ப்புள்ள சிறிய, நடுத்தர ஏற்றுமதியாளர்களை இனம் கண்டு ஊக்குவிக்கும். இது எக்ஸிம் பேங்க் ஆப் இந்தியா, சிட்பி ஆகிய நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அந்த நிதி, ஏற்றுமதி சார்ந்த அலகுகளில், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பங்கு மற்றும் பங்கு சார்ந்த மாற்று முதலீடுகளாக இந்நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு ஊக்குவிக்கப்படும்.