அப்போது ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு

கடந்த 10 ஆண்டுகளாக அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள், இரண்டு மாதத்தில் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கண்டுபிடித்து விட்டார்கள். இவர்களை ஒருவேளை புலனாய்வுத் துறையில் வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம். அவசர கோலத்தில் கவர்னரிடம் சென்றுள்ளார்கள். ஒரு அரசின் செயல்பாட்டை தீர்மானிக்க ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தேவை. கடன் வாங்குவதை குற்றம் சொல்ல முடியாது. அதனை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம்’ என கூறியுள்ளார். மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது முதல், எந்தவித முகாந்திரமும் இல்லாமல், சகட்டுமேனிக்கு மத்திய அரசை குற்றம் கூறிவந்தவர்தான் இதே ப. சிதம்பரம். ஆனால், தங்களது கூட்டணி கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், அரசின் செயல்பாட்டை தீர்மானிக்க ஒன்று, இரண்டு ஆண்டுகள் தேவை என கூறுவது எந்தவிதத்தில் நியாயம், அப்போது ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சா என பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.